
சுதந்திரதினம் 1
கிடைத்து
78 ஆண்டுகள் முடிந்து விட்டது
இன்னும் வறுமை
ஒழியவில்லை
ஏழை ஏழையாகத்தான்
இருக்கிறான்
பணக்காரன் பணக்காரனாகத்தான்
இருக்கிறான்
உண்மையில்
சுதந்திரம்
என்பது
கொண்டாட்டமா
திண்டாட்டமா
தெரியவில்லை
சுதந்திர தினம் 2
எனக்கு
உண்மையில்
பாரதிதான்
ஞாபகத்திற்கு
வருகிறார்
போகின்ற பாரதமும்
வருகின்ற பாரதமும்
என்று கவிதை எழுதினார்
திரும்பிப்பார்த்தால்
பாரதம்
போய்க் கொண்டே
இருக்கிறது
