கல்யாண்ஜி கவிதை

இந்த மணல்
மலையில் பிறந்தது.
இந்தச் சிப்பி
கடலில் பிறந்தது.
இந்த மழை
வானத்தில் பிறந்தது.
இந்த மஞ்சட் கொன்றைப் பூ
உச்சிக் கிளையில்.
எல்லாம் பிறந்தது
பெரிய பெரிய இடங்களில்.
இப்போது பறந்து போன
இந்த மூன்று குருவிக் குஞ்சுகள்
பிறந்தது மட்டும்
எங்கள் வீட்டுத்
துருப்பிடித்த தபால் பெட்டியில்.