பருப்பு சாதம் செய்வது எப்படி/திண்டுக்கல்சமையல்

தேவையான பொருட்கள் :::
1 கப் அரிசி
1/4 கப் பாசிப் பருப்பு
1/2 கப் துவரம் பருப்பு
1 பெரிய வெங்காயம்
2 தக்காளி
1 டீஸ்பூன் நெய்
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 பச்சைமிளகாய்
1/2 நெய்
1 உளுந்தம் பருப்பு
1/2 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் சாம்பார் தூள்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை:::

முதலில் ஒரு கப் அரிசியுடன் பருப்பையும் சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்

ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்

பிறகு நறுக்கிய வெங்காயம் தக்காளி இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

இரண்டும் நன்றாக வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சாம்பார் தூள் சேர்த்து கலந்து விடவும் பிறகு நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்

தண்ணீர் கொதித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை கழுவி சேர்த்துக் கொள்ளவும்

இரண்டு விசில் விட்டு விசில் அடங்கியதும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான கம கம அரிசிபருப்பு சாதம் தயார்…