
சுதா திருமணம் முடிந்து கணவனுடன் அம்பை கிளம்பி போனாள். ஆறு மாதங்கள் ஓடி விட்டன.
சுதாவின் அப்பா சீனிவாசன் பெண் மீது அதிகம் பாசம் உள்ளவர். இரு தடவை பெண்ணையும் மாப்பிள்ளையும் போய் பார்த்து விட்டு வந்து விட்டார்.
சுதாவின் தாயார் பாவம் கைபேசியில் விசாரித்துக் கொள்வதோடு சரி.
பெண்ணை பார்க்கவேண்டும் என்று கொள்ளை ஆசைதான் ஆனால் குடும்பம்,வயதான மாமனார் மாமியார், வேலைக்கும் போய் கொண்டே படிக்கும் மகன் ,இவர்களை எல்லாம் விட்டு விட்டு எங்கும் நகரவே முடிவதில்லை.
மகள் சந்தோஷமாகவும்,சுகமாகவும் புகுந்த வீட்டில் இருக்கிறாள் என்றால் பெற்ற தாய்கு வேறு என்ன வேண்டும்?
திடீர் என்று சுதா பிறந்த வீட்டுக்கு மாப்பிள்ளையுடன் ஒரு வார லீவில் வருகிறாள் என்ற செய்தியை கேட்டு
வீட்டில் யாருக்கும் தலைகால் புரியவில்லை.
“அம்மா,அப்பா,”சுதா ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
“மாமா,அத்தை,சௌக்கியமா?”மாப்பிள்ளையின் குசல விசாரணை.
தாத்தா பாட்டியை வணங்கிவிட்டு “குமார் எங்கே?”என்று அண்ணனைப் பற்றி விசாரித்தாள் சுதா.
“குமார் கிளாஸ் நோட் எடுக்க ப்ரெண்ட் வீட்டுக்கு போய் இருக்கான்.
இப்ப வந்து விடுவான்.”அப்பாவின் பதில்.
சுதா வந்திருக்கும் செய்தி அறிந்து அவளுடைய சித்தி ஃபோனில் அழைத்தாள்.
“சௌக்கியமா இருக்கேன் சித்தி.
முழங்கையில் தட்டிய சுகம் போல.
கவலை வேண்டாம்.”என்றாள் சுதா.
சுதாவின் அம்மாவும் அருகிலேயே இருந்தால் காதில் விழுந்தது .
மறு நாள் சுதாவின் தாயார் கமலம் அவசர அவசரமாக கையில் சாத கரண்டியும் தட்டுமாக காக்காய் கு சாதம் வைக்க ஓடிச் சென்றாள்.
“அம்மா, என்ன வலி”என்று முழங்கையைப்.பிடித்துக் கொண்டு கதவோடு சாய்ந்து நின்றாள் சற்று நேரம்.
சுரீர் என்று ஏதோ புரிந்தார் போல இருந்தது.
குழந்தை சுதா இதயா சுகம் என்று சொல்லி நம் மனம் நோகடிக்காமல் மழுப்பி இருக்கிறாள்?
கமலம் சுதாவை எதுவும் கேட்க போவதில்லை.
