கண்களை கசக்கிக் கொண்டேன்
தலையற்ற சிலையைக் கண்ட நிமிடம்
நெஞ்சு அதிர்ந்தது
கலையின் அழிவில்
மானுடம் அல்லவோ வீழ்த்தப்பட்டது?
எந்தத் தலையை அதில் பொருத்திப் பார்க்க?
எதுவும் அந்த சிற்பியின் கனவாகுமா?
தலைபோயும் உடல் வாடா சிலையில்
தொண்டர்கள் தலைவர்கள் அரசர்கள் ஆண்டிகள்
ஆண்கள் பெண்கள் என எவரும் தெளிவாகப் பொருந்தவில்லை
இப்படியே இருக்கட்டும் அது உன்னை வருத்துவது போல் ஒரு நாள் சிதைத்தவனை சிந்திக்கச் செய்யலாம்
அவன் கண்ணீருக்காக காத்திருக்கும் காலத்தில் என் மூச்சு கலந்திருக்கும்.
