“மே மே என்று ஆடு போல் புலம்பாதீர்கள்” /தொகுப்பு ஸ்ரீதர் சாமா

ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் மாணவனாக இருந்த பொழுது அழைக்கப் பட்டார் . அவரது ஆசிரியர் வைத்தியநாத சாஸ்திரி. அமர கோசம் போன்ற புத்தகங்களிலிருந்து பாடம் எடுப்பார். குரு அடிக்கடி காலபைரவர் கோயில் போவார். ஸ்ரீனிவாச சாஸ்திரியையும் உடன் அழைத்துச் செல்வார் .

ஒருமுறை ஒரு சமஸ்க்ரித பாடலை விளக்கும் போது சொன்னார் : “இதோ இந்தப் பெண் எனது (சமஸ்க்ரிதத்தில் ‘மே ‘), இவை எனது குழந்தைகள் (‘மே ‘), இந்த வீடு எனது (‘மே ‘) .. இப்படி மே மே என்று ஆடு போல் பிதற்றுபவனும் ஒரு நாள் ஆடு போல் காலம் என்னும் ஓநாய் வாய்ப்பட்டு அழிவான் …”

இந்த உபன்யாசத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பண்டிதர் வாய் விட்டு அழுதார். ” நான் ஒரு பணக்காரன் . மனைவிக்கு உடம்பு சரியில்லை . ஒரு பிள்ளை வரம் கேட்க ஸ்வாமிகளிடம் வந்தேன். ஸ்வாமிகள் உலகப் பொருள் நிலையின்மை பற்றிப் பேசியது என்னை வெகுவாக பாதித்து விட்டது. ஸ்வாமிகளுக்கு நன்றி .”

பிற்காலத்தில் அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வட இந்தியாவில் ஒரு பெரிய சன்யாசி ஆனார்.