
இவர் கதை ஒரு காவியம்; உணர்ச்சி ஒரு தேசீய வெள்ளம். கீர்த்தியை மட்டுமா, மூர்த்தியையும் மறப்பதற்கு இத் நல்ல உடற்கட்டு; ஆள் குட்டை. உருண்டை முகம், திரண்ட புயம். நிமிர்ந்த நேரான நோக்கு. பணிவுடன் துணிவைப் புலப்படுத்தும் மீசை. திருநெல்வேலிக் கறுப்பு திறந்தான்; ஆனால் அஞ்சன மேனியில்லை, அழகு சற்றுக் உறுத்திருக்கிறது! என்று சொல்லத்தக்க நல்ல கவர்ச்சியான தோற்றம், பிற்காலத் தேசபக்தர்களைப் போல் இல்லாமல், மேல் அங்கியும் அங்க வஸ்திரமும், முடிசூடா மன்னருக்கு ஒரு முடிபோலத் தோன்றிய தலைப்பாகையும் வீர சிதம்பரம் பிள்ளையை அறிவித்தன அந்தக் கூட்டத்திலே.
சுமார் அறுபதாண்டுக்குமுன் ஒரு நாள் மாலைப்பொழுதில் இத் நெல்லைக் கலாசாலை ஒன்றில்-பாடங்கள் முடிந்ததோ இக்லையோ?-மாணாக்கர்கள் வகுப்புகளிலிருந்து ‘வேகமாக வெளியே வந்தனர். பலரும் வழக்கம்போல் வீட்டுக்குப் போகவில்லை; நகரத்துக் கீழ ரத வீதி அம்மன் கோயிலை அவர்களுள் நானும் ஒருவன். . சந்நிதிக்குக்கு எதிரே போய்க் காத்திருந்தோம். தெய்வ தரிசனத்துக்கு அன்று. அங்கே விரைவில் கூட்டம் அதிகரித்து அவரும் குறித்த நேரத்தில் வந்து பேசத் தொடங்கினார். தமிழில்தான்.
அக்காலத்தில் பொதுக் கூட்டங்களிலும் கூட வக்கீல்களும் இனம் பிறரும் ஆங்கிலத்தில் பேசுவார்கள். “தமிழில் அழகாக ஆற்றலுடன் பேசமுடியுமா!” என்று கேட்ட சந்தேகப் பிராணிகளும் உண்டு. ஆனால் சிதம்பரம் பிள்ளை தட்டுத் அடங்கலின்றி அரசியல் கருத்துக்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தெளிவாக, கோவையாக எடுத்துரைத் தார். “பாதி மனிதனும் பாதிச் சிங்கமுமாகத் தோன்றிய நரசிங்கம் போல் பாதி அரசனும் வணிகனுமாக இருந்த வெள்ளையன் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சுகின்றான்1 என்பது போன்ற விஷயங்களை, நேரடியாக உள்ளம் உள்ளத்தைத் தொட்டுப் பேசுவதுபோல், பேசினார். ஏன், உள்ளம் உள்ளத்தைத் தாக்கி உணர்த்தியதாகவும் தோன்றியது, சுமார் ஒரு மணி நேரம் நடந்த அரசியல் காலட்சேபத்திலே சொட்டச் சொட்ட நனைந்து உளம் குளிர்ந்து நின்றேன்.
அதே 1907-ஆம் ஆண்டில், விபின சந்திர பாலர் என்ற வங்கப் பேரறிஞர் வங்காளக் குடாக்கடல் என்ற சென்னைக் கடலின் கரையிலே சொல்மாரி பொழிந்ததை அக்காலப் பத்திரிகைகள் வருணித்ததுண்டு. சென்னையில் பெருகிய தேசீய வெள்ளம் தென்னகக் கோடியில் இருந்த சிறுவனாகிய என் வரையில் பொங்கி வந்துவிட்டது.
என் ஊராகிய விட்டலபுரத்திலிருந்து தாமிரபருணியாறு சுமார் ஒரு மைலுக்கப்பால் ஓடுவதால் அதில் வெள்ளம் ஓடு வதை நான் போய்ப் பார்த்ததில்லை. எனினும் மேடான கரை யில்லாததால் அந்த வெள்ளம் என்னைத் தேடி ஊரை நோக்கி வந்துவிடும். விபினசந்திரபாலரின் சென்னைப் பிரசங்க வெள்ளமும், “ஹிந்து,” “சுதேசமித்திரன்” வாயிலாக என்னைத் தேடி என் கலாசாலைக்கே வந்துவிட்டது என்று எண்ணமிட்டேன்.
தேசீய வெள்ளக் காட்சி
விபின சந்திரருடன் திலகர், அரவிந்தர், லஜபதிராய் ஆகியவர்களும் சேர்ந்து நான்கு தீவிர தேசபக்த மூர்த்திகளாய் எங்கள் அகக் கண்ணுக்கு இலக்காயினர். இந்த நால்வரின் கொள்கைகளையும் ஒரே தேசீயப் புது வெள்ளமாக நெல்லை மாணாக்கர்களுக்கும் பொது மக்களுக்ரும் காட்டியவர்கள் சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவமும், சுப்பிர மணிய பாரதியும் ஆகிய மூவருமேயாவர்.
புது வெள்ளம் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி கொண்டிருந்த நான், திருநெல்வேலிச் சந்திப்பாகிய வீரராகவபுரத்தில் ஊருக்குச் சமீபமாக ஓடும் தாமிரபருணியில் மேடான கரைப் புறத்திலிருந்தும், உயரமான பாலத்தின் மீதிருந்தும் ஆற்று வெள்ளம் பயங்கரமாய்ச் சுழித்து ஓடும் அழகைப் பார்த்துப் பார்த்து அனுபவித்திருக்கிறேன். திருநெல்வேலித் தமிழர்களிடையே பொங்கிப் பெருகிய தேசீயப் புது வெள்ளத்தைக் கண்டபோதும், நான் அத்தகைய அனுபவம் அடைந்தேன்; அதிசயித்தேன்; ஆனந்தமுற்றேன்; அச்சமும் கொண்டேன்.
விரைவில் அந்த வெள்ளத்தின் வீர முழக்கமாகிவிட்டது சிதம்பரம் பிள்ளையின் சிம்மக் குரல். அக்காலத்திலே பொதுக் சுட்டம் கூட்டித் தமிழில் உணர்ச்சியுடன் பேசும் முறையைப் அலசிப் பிரசித்தமாக்கியவர் சிதம்பரம் பிள்ளையே. உள்ளொன்று எவத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்; அரசியல் நேர்மையாகவும் கூர்மையாகவும் பார்ப்பவர். தொழிலாளிகளின் துயரங்களும் ஏழை மக்களின் இன்னல்களும் கள்ளங்கவடு அறியாத இவர்இதயத்தை வாட்டி வதைத்தன.
1942ல்தான் “வெள்ளையனே! வெளியேறு” என்ற புரட்சி முழக்கம் ஏற்பட்டதாகப் பலரும் நினைக்கிறார்கள் அல்லவா? ஆனால் அந்த நாளிலேயே இத்தகைய புரட்சி முழக்கத்திற்குத் தோற்றுவாய் செய்துவிட்டார் சிதம்பரனார்.
1908-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் சிதம்பரம் பிள்ளைமீது, “அரசாங்க நிந்தனை” வழக்குத் தொடர்ந்தார்கள். அந்த ஆண்டில் பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் இவர் நான்கு கூட்டங்களில் அரச நிந்தனைச் சொற்பொழிவுகள் செய்தார் என்பது வெள்ளை அதிகாரிகளின் கருத்து. அச் சொற்பொழிவுகளை மூன்று விடாமல் நான் கேட்டிருக்கிறேன். ”வெள்ளையனே! வெளியேறு” என்பதுதான் அவற்றின் பல்லவி.
“சுதேசி” உணர்ச்சியின் உச்ச நிலையில், தூத்துக்குடியும், திருநெல்வேலியும் ஒரே கொந்தளிக்கும் கடலாக இணைத்துதிருந்தபோது, “மக்கள் ஒன்று சேர்ந்தால் வெள்ளையரை விரட்டி விடலாம். ஏன், அவர்களே போய்விடுவார்கள்” என்ற கருத்தை ஐயம் திரிபுகளுக்கு இடமின்றி வெளியிட் டார் சிதம்பரனார் என்பதை மறுக்க முடியாது; என்னால் மறக்கவும் முடியாது.
சிறைவாசமும் தமிழ்க் காதலும்
விபினசந்திரபாலர் சிறைப்பட்டு விடுதலை பெற்ற தினத்திலே, சிதம்பரம் பிள்ளையும் இவர் தோழரான சுப்பிரமணிய சிவமும் தாமிரபருணியாற்றங்கரையில் ஒரு கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில், அரசாங்க நிந்தனை அடங்கியிருந்ததாக நடைபெற்றது வழக்கு. அது சுமார் நாலுமாத் காலம் நடந்து முடிவுற்றது. அரச நிந்தனைக் குற்தத்திற்காகவும் சுப்பிரமணிய சிவாவுக்கு உணவும் இடமும் அளித்து உதவியதற்காகவும் சிதம்பரம்பிள்ளை இருமுறை ஆயுள் தண்டனையாகிய தீவாந்தர சிட்சை பெற்றார். இரட்டை ஆயுள் தண்டனையையும் சிதம்பரம்பிள்ளை அப் படியே அனுபவித்திருந்தால் 1948-ஆம் ஆண்டு வரையில் சிறைவாசம் செய்திருக்க வேண்டும்! அதாவது, இறந்துபோன 1936-ஆம் ஆண்டுக்குப் பின்பும் பன்னிரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை அனுபவித்திருக்க வேண்டும்! ஆனால் அந்தத் தண்டனை அன்னிய அரசாங்கத்திற்கே ஆயுள் தண்டனையாகி விட்டது போல் பிரிட்டிை ஆட்சியே முடிந்து போய்விட்டது 1947-ஆம் ஆண்டிலே.
ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டதும், தாம் விரும்பிய படி தமிழ்நூல் எழுத இவருக்கு வசதி கிடைத்ததும் தேச பக்தர்களின் உள்ளத்திற்கு ஒருவாறு ஆறுதல் அளித்தன, தமிழ்க் காதலிலும் சிறப்பாகத் திருக்குறள் ஆராய்ச்சியிலும், இவர்தம் சிறைத் துன்பங்களை மறக்கத் தொடங்கினார். பின்னாளில் காங்கிரஸ்காரர் அனுபவித்த சிறைவாசம் வேறு. சிதம்பரம்பிள்ளை அனுபவித்த சிறைவாசம் என்ற நரகவாசம் வேறு. ஆனால் அத்தனை துன்பங்களும் உடலை வருத்தினவேயன்றி இவரது வீர உள்ளத்தை ஞானக் குழந்தையுள்ளத்தை
அடியோடு கெடுத்துவிடவில்லை.
வெளி
“இன்னிலை” என்ற ஒரு நூலைப் பதினெண்கீழ்க்கணக்கு ஒன்று என்று சிதம்பரம்பிள்ளை வெளியிட்டிருக்கிறார். அதன் கையெழுத்துப் பிரதியைப் புகையேற்றிப் பழைய ஏட்டின் பிரதியென்று ஒரு பண்டிதர் இவர் கையில் கொடுத்தார். அவரை நம்பித்தான் சிதம்பரனார் அதை வெளியிடலானார். உண்மையில் அந்தப் பிரதி அப்பண்டிதரின் ஒரு விசுவாமித்திர சிருஷ்டிதான்! அதற்காக அவர் இவரிடம் பணம் பெற்றுக் கொண்டார். அதே போலிப் புலவர் ஒரு சமயம் வ.வே.சு. ஐயரையும் இவ்விதமாக ஏமாற்றி விட்டார்!
சிதம்பரனாரின் வெள்ளையுள்ளத்திற்கு மற்றும் ஓர்உதாரணம் நினைவிற்கு வருகிறது. இரசிகமணி டி.கே.சி. தம்பன் பாடல்களைத் திருத்தி வருகிறார் என்று சிதம்பரம் திருக்குறளையும் திருத்தத் துணிந்துவிட்டார்! தம் திருத்தங்களில் சிலவற்றை இவர் சொல்ல, என் நண்பருள் ஒருவர் சீடர்போல் குறித்துக் கொண்டிருந்தார். பிள்ளை விடைபெற்றுச் சென்றபின், அந்த நண்பர் என்னை நோக்கி, தான் இந்தப் பாட பேதங்களை ஒப்புக்கொள்ளவில்லை” என்றார். நான் திகைத்துப் போனேன். நண்பரோ, “அந்தப் பெரியாரின் பொன்னான உள்ளத்தைப் புண்ணாக்க விரும்பாமல்தான் அத்திருத்தங்களை எழுதி வந்தேன்” தொடர்ந்து கூறினார். ஆனால் இந்த உதாரணங்களிலிருந்து சிதம்பரம்பிள்ளையின் தமிழ்ப் புலமையையும் ஆராய்ச்சித் இதளையும் கூட லேசாக மதிப்பிடுவது சரியன்று.
திருக்குற்றாலத்தில் சாரற் பருவம் தொடக்கமாகித் தாமிரபருணி “சுழிபலவாய் ஒழுகும் குளிர் நீர்ப் பொருநை ” என்கிறபடியே தெளிந்து குளிர்ந்து பொங்கிப் பெருகி வருவதையும் பார்த்திருக்கிறேன். மழைக்காலத்தில் கலங்கி வண்டலிட்டு நுரைத்து மண்டிவரும் வெள்ளக் காட்சியையும் கண்டிருக்கிறேன். திருநெல்வேலிச் சந்திப்பிலே சோனா மாரி பொழிந்து ஆற்றங்கரை உடைந்து ஒரே வெள்ளக் காடாகி அச்சமும் சேதமும் விளைத்ததையும் பார்த்திருக்கிறேன். பேய் மழை, பேய்க் காற்றுகளுக்கிடையே மரங்கள் சாய்ந்து வீடு வாசல்கள் மூழ்கிப் போனதையும் ஒருசமயம் பார்த்து விட்டேன். இத்தகைய மூவகைக் காட்சிகளையும் சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்த தேசீய வெள்ளக் காட்சிகளாகவும் நான் காண நேர்ந்துவிட்டது.
பிஸ்ரீ/நான் அறிந்த தமிழ் மணிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
