
தேவையான பொருட்கள்:
ரவா –
பொடித்த சீனி – 3/4 கப்
முந்திரி -12
ஏலக்காய் – 3
டால்டா – 100 கிராம்
செய்முறை:::::
வாணலியில் ரவாவை கொட்டி 2 நிமிடம் வறுத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். சீனியையும் பொடித்துக் கொள்ளவும்.
முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும். ரவா மாவுடன் பொடித்த சீனியை போட்டு அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் போட்டு கிளறிக் கொள்ளவும்.
எடுத்துக் கொண்ட மாவில் நான்கில் ஒரு பாகம் அல்லது அதற்கும் குறைவான மாவை தனியாக ஒதுக்கி வைக்கவும்.
வாணலியில் டால்டாவை போட்டு உருக்கி, முக்கால் பாகம் உள்ள மாவில் ஊற்றி (மாவில் ஊற்றும் போது நுரை வர வேண்டும்.) பிசைந்து கொள்ளவும்.
கை சுடும் பதத்தில் பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
பிறகு ஒதுக்கி வைத்துள்ள கால் கப் மாவில் போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்…..
