
ஒருவர்க்கு ஒரு எதிரிதானே எதிரியாக இருக்க முடியும்?
ஆனால் பாருங்கள்
என் கண்கள்
எனக்கு எதிராக நான் பார்க்கக்
கூடாதவற்றையெல்லாம் பார்க்கிறது
என் கைகள்
எனக்கு எதிரானதையே எப்போதும் எழுதுகிறது
என் கால்கள்
நான் போகக் கூடாத பக்கம் தான் போகிறது.
என் வாய் எப்போதும் எனக்கு எதிராகவே பேசிவிடுகிறது..
இத்தனை எதிரிகளை வைத்துக் கொண்டு நேற்று ஒரு கவிதை எழுத அமர்ந்தேன் ..
அது கடைசியில் காதல் கவிதையாக முடிந்துவிட்டது.
காதலுக்கு நிறைய எதிரிகள் என்பதெல்லாம் பொய்தான் .
25.8.2024
