ப.மதியழகன்/குக்கூ

1
வண்ணத்துப்பூச்சி
வருகிறது போகிறது
மலர் அங்கேயே
இருக்கிறது

2
தடாகத்தில்
மிதந்து கொண்டிருக்கும்
தாமரை இலையில்
பளிங்குகளாக
நீர்க்குமிழிகள்

3
தீயின்
முலை சப்பும்
விட்டில் பூச்சிகள்

4
எனக்கு முன்
பாதை இருக்கிறது
நான் சேருமிடம்
எது?

5
பிரபஞ்சமே
மெளனமாக இருக்கிறது
நான் ஊமை
ஆயினும் பேச்சு
நின்றபாடில்லை

6
வசந்தம்
வருகிறது போகிறது
நீல மலர்கள்
இருந்த இடத்தில்…

7
நான்
நிலாவைப் பார்க்கிறேன்
நிலா
என்னைப் பார்க்கிறது

8
விழுந்த
ஒற்றை மழைத்துளியின்
தலைமேல்
மற்றொரு துளி விழுகிறது

9
என் குரல்
மலைமுகடுகளின் மீது
மோதி எதிரொலிக்க
கேட்க நானில்லை
அங்கே

10
மழைத்துளி
கடல்மேல் விழுந்து
உப்பாகிறது

11
இலை மீது விழுந்த
பனித்துளி
கதிரவன் மெல்ல மேலெழ
வாழ்க்கையைக் கொண்டாடுகிறது

12
கண்முன்னே
தீப்பற்றி எரிவது
குடிசைகள் மட்டுமல்ல