
கோபியர்களுக்கு
அவன் கோபாலன்
அர்ஜுனனுக்கு அவன்
பரந்தாமன்
பக்தர்களுக்கு அவன்
பரமாத்மா
துவாரகைக்கு அவன்
மன்னன்
அவதாரங்களில் அவன்
கிருஷ்ணன்
அவனது லீலையே
இவ்வுலகம்
அவனது உபதேசமே
கீதை
பாண்டவர்களுக்கு
வெற்றி தேடித் தந்தான்
சத்தியத்தை நிலைநாட்டவே
அவன் பிறந்து வந்தான்
வாழ்க்கையே திருவிழா
என்றான்
போபிகைகளுடன்
ஆனந்த நடனம் புரிந்தான்
இன்றும் புல்லாங்குழல்
எங்கள் புருஷோத்தமன்
புகழ் பாடிக் கொண்டிருக்கிறது!
