
வட்ட வட்ட வெளிச்ச துளிகளாய்
முகத்தில் மோதி வம்பிழுத்தது
சூரியனோ என சிணுங்கினாள்
நான் இல்லை அந்த தாமரை
இலை மீதாடும் நீர்த்திவலையை
பார் என்றான் சூரியன்
என் மீது பட்ட கதிர் உன்னை
தொட்டது உண்மைதான் ஆனால்
என்னை முன்னும் பின்னும்
ஓடவிடும் இலையே இதற்கு
காரணம் என்றது நீர்த்திவலை.
ஐயோ நானாட நீரலைதானே
காரணம் என்றது தாமரை இலை
நீரலையோ நான் தானாக
எழுவதில்லையே
காற்றசையதானே நானசைகிறேன் என்றது
காற்றோ….
கண்ணனுக்காக காத்திருந்து
பெண்ணே நீ விட்ட
பெருமூச்சைதானே நீரில்
மோத செய்தேன்
இதில என் குற்றம் என்ன
என்று சிரித்தது.
