சும்மா..சும்மா..ஹரணி

சும்மா சும்மா சும்மா சும்மா
என்பது சும்மா இல்லை இல்லை
சும்மா இருப்பது சுகமே இல்லை
சும்மா காலம் கழிக்காதே.

சும்மா சும்மா சும்மா சும்மா
கத்திட எதுவுமில்லை சும்மா சும்மாவே
என்றிட யாருக்கும் வாழ்வும் இல்லை
சும்மா வாழ்வின் ஞானம்.

சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மாவைச் சுமப்பது சும்மா ஆகுமா
சும்மா சுமந்தால் சுகமும் கிடைக்குமா
சும்மா சொல்லி சும்மாயிராதே.

சும்மா சும்மா சும்மா சும்மா
நான்கு சும்மாவில் நாலும் இருக்கு
நானும் சும்மா என்றே சொல்லுவரோ
எவரும் சும்மா அறியாமல்.

சும்மா சும்மா சும்மா சும்மா
அம்மா அம்மா அம்மா அம்மா
என்பா என்பா என்பா என்பா
அம்மா சும்மா ஆகுமா.

.