குடியானவனும் நீர்த்தேவதையும்

ஒரு குடியானவன் தனது கோடாரியை ஆற்றுக்குள் நழுவ விட்டு விட்டான். அவன் மிகவும் கவல யுற்று ஆற்றின் கரையிலமர்ந்து அழ ஆரம்பித்தான்.
ஒரு நீர்த்தேவதை அவன் அழுவதைக் கேட்டு அவ னுக்காக மிகவும் வருத்தப்பட்டு ஒரு தங்கக் கோடாரியை எடுத்து வந்து அவனிடம் கேட்டது:
‘இது உன்னுடைய கோடாரியா?”
“இல்லை” என்றான். ‘இது என்னுடையது இல்லை. தேவதை பிறகு வெள்ளிக் கோடாரியைக் கொண்டு வந்தது.
“இது என்னுடையது இல்லை” என்று அவன் திரும்பவும் சென்னான்.
பிறகு தேவதை அவனது சொந்தக் கோடாரியை எடுத்து வந்தது.
‘அதுதான் என்னுடையது” என்றான் குடியான
அவன் உண்மை பேசியதற்காக மூன்று கோடாரி களையும் தேவதை அவனுக்கே கொடுத்தது.
அக்குடியானவன் வீட்டுக்குச் சென்று மூன்று கோடாரிகளையும் தன் நண்பர்களிடம் காட்டி நடந்த தைச் சொன்னான்.
அதைக் கேட்ட ஒருவன் தானும் அது போலச் செய்ய நினைத்தான். அவன் ஆற்றுக்குச் சென்று கோடாரியை நீரில் வீசிவிட்டு அழ ஆரம்பித்தான்.
உடனே நீர்த்தேவதை ஒரு தங்கக் கோடாரியைக் கொண்டு வந்து கேட்டது:
“இது உனது கோடாரியா?”
அவனோ மிகவும் மகிழ்ச்சியோடு கத்தினான்: “ஆமாம், ஆமாம், இது என்னுடையதுதான்!” ஆனால் நீர்த்தேவதை அவனுக்குத்
தங்கக்கோடாரியையோ அவனது சொந்தக் கோடாரியையோ கொடுக்கவில்லை. ஏனெனில் அவன் பொய் பேசினான்.
