அழகியசிங்கர்/முதல் நாளில் வாசிப்பனுபவம்

இந்தப் பகுதியை இன்று ஆரம்பித்து 50 நாட்களுக்கு 50 மணி நேரங்கள் வாசிப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். என்னைப்போல இன்னும் சில நண்பர்களும் இதைத் தொடர்வார்கள் என்று தோன்றுகிறது.

முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.

சிறுவாணி வாசகர் மையம் மூலம் அறிமுகமான புத்தகம்தான் ரா கி ர டைம்ஸ் என்ற கட்டுரைத் தொகுப்பு. எழுதியவர் ரா தி ரங்கராஜன் என்ற எழுத்தாளர்.

அண்ணா நகர் டைம்ஸ் இல் வெளிவந்து நாலு மூலை கட்டுரைகளின் தொகுப்பு இது.

பத்திரிகையின் பக்கங்களுக்கு ஏற்ப 63 கட்டுரைகளை எழுதி உள்ளார். நான் ஏற்கனவே 159 பக்கங்கள் வரை இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன். இன்று 160 பக்கத்திலிருந்து 214 பக்கங்கள் வரை படித்து முடித்தேன். வழக்கமாக கட்டாயப்படுத்திக்கொண்டு ஒரு புத்தகத்தை நான் படிப்பதில்லை. ஏன் பெரும்பாலும்படிப்பதில்லை. வாசிக்க வாசிக்க என்ற அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வாசிக்க ஆரம்பித்தேன். அப்பúôதுதான் தெரிந்தது வாசிப்பது அவ்வளவு எளிதல்ல என்று. இன்று 44 பக்கங்கள் படித்து புத்தகம் முழுவதும் படித்து முடித்துவிட்டேன். 44 பக்கங்கள் படிப்பதற்கு 80 நிமிடங்கள் ஆகிவிட்டன.

இன்று பகல் 12.55க்குப் படிக்க உட்கார்ந்தேன். 12.55க்குள் கண்ணை சுழட்டத் தொடங்கின. பிள்ளையார் சதூர்த்தி என்பதால் விருந்து சாப்பிட்டதால் கிறங்க வைக்கும் தூக்கம். பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டேன்.

தூங்கி எழுத்தவுடன் மணி 3 ஆகிவிட்டது. புத்தகத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று முடித்துவிட்டேன். 44 பக்கங்கள் படிக்க 80 நிமிடங்கள் ஓடிவிட்டன. நான் சற்று வேகமாகப் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சில நாட்களில் என் வேகம் கூடும் என்று நம்புகிறேன்.. என் சில நண்பர்கள் 80 நிமிடத்தில் 100 பக்கங்களுக்கு மேல் படித்து விடுவார்கள். இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் சில தகவல்களைப் பின்னால் தருகிறேன்.

No photo description available.