
உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கே
இடுக்கண் களைவது காதல்.
மோப்பக் குழையும் அனிச்சம்;
நோக்கக் குழையும் அணங்கு.
மோப்பம் பிடித்து நோக்க
மடவார் மேனியில் மறைந்த நான்முகன்
நாணத்தை மறைத்து
நாணற்பழத்தை ஈந்தனன்.
உடுக்கை யிழந்தா எல்குல் போலாங்கே
இடுப்பைப் பிளப்பது காமம்.
சுடர்விட்டெரிந்-
தணங்கை அனங்கனாக்கிக்
கொழுநனைக் குழந்தையாக்கும்
தீப்பிழம்பு.
