லக்ஷ்மி ரமணன்/இது விளம்பரயுகம்

ஒருவாரமாக ஜுரம், இருமல், சளி என்று அவஸ்தைப்பட்டுவிட்டுமீண்ட பிரபு தான்
வேலைபார்த்த மின் உபகரணங்களை விற்கும் கம்பெனி அலுவலகம் வந்தபோது அதிலிருந்துமீண்ட பிரபு விடுப்பிலிருந்துஅன்றுதிரும்பி அன்று அலுவலகம் வந்தபோதுஅங்கு பளிச்சென்று தெரிந்த தரைவிரிப்பு, நாற்காலிகள்,அறை
களுக்கு அழகூட்டிய புதிய சோபாக்கள்இவை அனைத்தையுமே பார்த்து பிரமித்துப்போனவனாக”இதெல்லாம் யாருடைய வேலை?” என்று அருகில்நின்ற நண்பன் சுந்தரை கேட்ட தும் “புதுசா உதவி மானேஜரா வந்திருக்கிற
விக்னேஷ்சார்தான்”என்று அவன் சொன்ன பதில்பிரபுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“என்னது விக்னேஷா? அவனுக்கு கம்பெனியின் தற்போதைய மந்த நிலை தெரியுமா?
கம்பெனி நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருப்பதாக சிலரை வேலைநீக்கம் பண்ண
வேண்டிவந்தது.பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இதெல்லாம் அவசியமா? கோபத்துடன் பிரபு கம்பெனி எம்டி நல்லசிவத்தின் அறைக்குள்நுழைந்தான்.

“பிரபு எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன் .ஒருவாரத்திலே இங்கே எல்லாமே மாறிப்போயிருக்கே. நம்ம
கம்பெனி இப்ப இருக்கிறசூழ்நிலையில் இதெல்லாம் அவசியமா?”

பிரபுவுக்கு மனசளவில் விக்னேஷ்மீது பொறாமையும்,எரிச்சலும் உண்டு.அது
இன்று இன்னும் அதிகமாகிவிட்டதை அவன் குரலே உணர்த்தியது.

எம்டி நல்லசிவம் புன்னகையுடன் ” இந்த மாற்றத்துக்கு காரணம் நம்மவிக்னேஷ்தான்
அவனுடைய சித்தப்பா புதிசா ஆரம்பபிச்சு நடத்திக்கிட்டிருக்கிற கம்பெனிலேருந்து இது மாதிரி நாற்காலிகள்,சோபாக்கள்,

போன்றவைகளை விளம்பரப்படுத்தும்வகையில் வரவழைத்து நம்ம அலுவலகத்தை விகனேஷ் தான் அழகுபடுத்தியிருக்கிறான்.கம்பெனி பெயர் கைலாஸ்நாத் பர்னிசர்ஸ்.

வெளியே விளம்பரப்பலகை வைக்க அனுமதித்திருக்கிறதாலே அதுக்கும் பணம்கொடுத்திருக்காங்க விக்னேஷ் இருக்கிறப்ப நாம எதுக்கும் கவலைப்படவேண்டாம். தன் சித்தப்பாவிடம் பேசி அவன் செய்தநல்லகாரியத்திற்கு நான் நன்றி தெரிவித்தால் “ஒரு பொறுப்பேற்றபின் அதை சிறப்பாக நடத்துவது என்கடமை சார் இதற்கெல்லாம் நன்றிசொல்லாதீங்கன்னு விக்னேஷ்பேசியவிதம் என்மனசைத்தொட்டது ” நல்லசிவம் சொன்னதைக்கேட்ட பிரபுவின்முகத்தில் அசடுவழியவில்லை கொட்டியது!!