டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்/ஒரு சாண் உலகம்எழுத்து வடிவம் : எஸ்.ஜென்னி

1

மந்திரச் சாவி

உலகில் இருக்கும் எத்தனையோ அதிசயங்களில், நம்முடைய உட லும் ஒன்று.நம்முடைய உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் ஓர் அதிசயம்தான். உடல் பாகங்களும், அவை செயல்படும் விதங்களும்
அதிசயத்திலும் அதிசயமானவை.
நம் உடலில் பொதிந்திருக்கும் ரகசியங் களைப் பார்த்து விஞ்ஞானிகளே அதிச யித்து பிரமித்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் நம் உடலைப் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
நம்முடைய உடல் அமைப்பில் மிகவும் அதிசயமானது சுவாச மண்டலம் என்று சொல்லலாம். அந்த சுவாச மண்டலத் துக்கு ஈடான அதிசயத்தைக் கொண்டது வயிறோடு தொடர்புடைய ஜீரண மண்டலம்.


இறைவனின் படைப்புகள் எல்லாவற்றுக்கும் ஆதாரமானது உயிர். இதற்கு சுவாசமும் ஆகாரமும் தேவை. சுவாசத்துக்கு சுவாச மண்டலம். ஆகாரத்துக்கு ஜீரண மண்டலம்.
இந்த இரண்டுமே இல்லை என்றால், எந்த ஒரு படைப்புமே இந்த உலகில் ‘இருக்க முடியாது’ என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் இன்னும் மதிப்பாகச் சொல்வது என்னவென்றால், சுவாச மண்டலத்தின் மையமான இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதயம் என்ற ஓர் உறுப்பை மட்டும் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அதேபோல்தான் சிறுநீரகம், கண், காது, மூக்கு என்று எந்த ஒரு பாகத்தைப் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால், வாழ்நாள் முழுவதும் ‘கவனித்து’ வந்தாலும், குறிப் பிட்ட ஒன்றின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. அதுதான் நம்முடைய ஜீரண மண்டலத்தின் மையமான ‘வயிறு’.
உண்மைதான்.
திறக்கத் திறக்க, எடுக்க எடுக்க, சிறு சிறு பெட்டிகளாக வெளிவரும் ஒரு பாண்டோரா பெட்டி மாதிரி, நம்முடைய ஜீரண மண்டலம் மற்றும் அதன் மையமான வயிறு பற்றிய ரகசியங்கள் ஏராளமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஜீரண மண்டலம் மற்றும் வயிறு குறித்த ‘பெட்டி’யை, ஒரு மந்திரச் சாவி போட்டுத் திறந்து, ரகசியங்களை விளக்குவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
கேட்பது, பார்ப்பது, வாசனையை நுகர்வது, நடப்பது, தொடுவது என ஒவ்வொரு செயல்பாட்டையும் அவற்றுக்கு து உரிய உடல் பாகங்கள் மூலம் உணர்ந்து கொள்கிறோம்.
மேற்கண்ட உடல் பாகங்களில் சில எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்கும். சில பாகங்கள் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கும்.
நடக்கத் தேவை இல்லை என்றால், கால்கள் ஓய்வு எடுக்கும். எதையும் பார்க்கத் தேவையில்லை என்றால் கண்கள் ஓய்வு எடுக்கும். இப்படி உடலின் பல பாகங்கள் ஓய்வு எடுக்கின்றன.
ஆனால் இதயம், சிறுநீரகம், நுரையீரல், வயிறு போன்றவை ஓய்வே இல்லாமல் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கின்றன.
நம்முடைய பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு விநாடி நேரமும் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட இந்த சில உடல் பாகங்கள் பழுதுபட்டால், செயற்கைக் கருவிகள் மூலம் ‘உயிர்’ வாழ முடியும். ஆனால், செயற்கைக் கருவியே இல்லாத ஒரே உடல் பாகம் என்றால் அது வயிறுதான்.
ஒரு வேளை அல்லது ஒரு நாள் விரதம் இருப்பதால், வயிற்றுக்கு ஓய்வு கொடுப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், வயிறு எந்த நேரத்திலும், எந்தக் காலத்திலும் ஓய்வே எடுப்பதில்லை. நாம் அதற்கு ‘சாப்பாடு’ போட, நமக்கு அது விசுவாசமாக வேலை செய்துகொண்டே இருக்கிறது.
வாய் வழியே தொண்டைப் பகுதியில் ஒரு நீண்ட குழாயாகத் துவங்கும் வயிறு, பலப்பல வடிவங்களாக மாறி, பணிகளைப் பிரித்துக் கொண்டு செயல்படுகிறது.
உங்கள் உயரத்தை ஏழால் பெருக்குங்கள். எதற்கு என யோசிக்காதீர்கள். அதுதான் நம் ஒவ்வொருடைய ஜீரண மண்டலத்தின் மொத்த உயரம். அப்படி, உயரமாகவும் உயர்தரமாகவும் செயல்படும் ஜீரண மண்டலத்தைப் பற்றி நாம் அறிந்து செயல்பட்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் நாம் நீண்ட நாள்கள் உயிர் வாழ முடியும்.
நம்முடைய ஜீரண மண்டலத்தை பத்து பாகங்களாகப் பிரிக்கலாம்.

  1. வாய் (Mouth)
    2.உணவுக்குழாய் (Oesophagus)
  2. இரைப்பை (Stomach) 4. கல்லீரல் (Liver)
  3. மண்ணீரல் (Spleen)
  4. கணையம் (Pancreas)
  5. பித்தப்பை (Gallbladder)
  6. சிறுகுடல் (Small Intestine)
  7. பெருங்குடல் (Large Intestine)
    10.ஆசனவாய் (Anus)
    இந்தப் புத்தகத்தில், மேற்கண்ட ஒவ்வொன்றைப் பற்றியும், அழகாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் முழுமையாகவும் அவசியமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

One Comment on “டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார்/ஒரு சாண் உலகம்எழுத்து வடிவம் : எஸ்.ஜென்னி”

Comments are closed.