
ஈக்கள் மொய்க்கவில்லை?
கொசுக்கள் கடிக்கவில்லை ?
பூச்சி புழுக்கள் பிடுங்கவில்லை?
கொல்லாமை நோன்பு பூண்ட
முல்லைக்கொடியாள்
கானகம் மணக்கப் பூக்கும்
கடமைக்கு ஏங்க,
காலனுக்குக் கையாளாய்
கூலிக்குக் குருதிகேட்டு
எண்திசையும் கால்நீட்டி
இருக்கும் சிலந்தி
பாரிக்கு நேர்
நீர் ? !

என்னே ஓர் உவமை!
பாரிக்கு நேர் நீ, முல்லைக்கொடியே!
எண்திசையும் கால்நீட்டி காலனுக்குக் கையாளாய் சிலந்தி!
அருமை தி.சோ. வேணுகோபால் வாழ்கவாழ்க நூறாண்டு வாழ்கவே!
இராமீசு
07.09.2024