
உடைந்த ஓடுகளின் இடுக்கில்
ஊடுருவி வந்த சூரிய
வெளிச்சத்தில்
வண்ணங்கள் உதிர்ந்த
வண்ணத்துப்பூச்சியாய்
வாழ்ந்தாலும் அதை மறந்து
காரைகள் பெயர்ந்து விழுந்த
சுவற்றில் மாட்டியிருந்த
ரசம் போன கண்ணாடியில்
உற்று பார்த்து முகம் துடைத்து
முடி ஒதுக்கி உடை திருத்தி
வாசலுக்கு வந்தவள்
தெருவில் இறங்கி
நடக்கும் போது
ஆரம்பம் ஆனது
வீதியில் தேவதையின்
ஊர்வலம்.
(
