
பாகற்காய் கடும் பிட்லைக் குழம்பு செய்வது எப்படி …oo
தேவை:
MTR குழம்பு மசாலா பொடி – 2 டேபிள் ஸ்பூன், பாசிப் பருப்பு 1 கப், மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன், சீரகம், உளுத்தம் பருப்பு- தலா 1 டீஸ்பூன், புளி எலுமிச்சை அளவு, பாகற்காய்-4, எண்ணெய்-1 டீஸ்பூன், கடுகு- 1/4 டீஸ்பூன், பெருங்காயம் சிட்டிகை, உளுத்தம் பருப்பு, வறுத்து அரைத்த மிளகு, சீரகப் பொடி தலா 2 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க: எண்ணெய்- 1 டீஸ்பூன், தனியா- 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், மிளகு, மிளகாய் வற்றல் – தலா 4,
செய்முறை:
பாசிப் பருப்புடன் MTR குழம்பு மசாலா பொடி ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி, சீரகம் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வும்.
புளி நீருடன் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் MTR குழம்பு மசாலா பொடி, உப்பு சேர்த்து, அது கொதிக்க ஆரம்பித்தவுடன் நறுக்கிய பாகற் காய்களை சேர்க்கவும்.
வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட் களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பாகற்காய் வெந்து புளி நெடி அடங்கியவுடன், வேக வைத்த பாசிப்பருப்பு, மற்றும் அரைத்த கலவை சேர்த்து கொதித்ததும் இறக்கவும். உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து மிளகு, சீரகப்பொடி தூவி பரிமாறவும்.
