
பாரதியே.. உன் நினைவை யாம் மறவோமே!
பாரதியே.. உன் நினைவை
போற்றுகின்றோமே!
பாரதியே.. உன்
பா வரிகள்..
மனதில் வைத்தோமே!
பார் முழுதும்..
உன் புகழைப்
பாடி வைத்தோமே!
அடிமைகளை
எழுப்புகின்ற
முரசு நீயடா.. உன்
அமுத வரிகள்..
ஒவ்வொன்றும்
ஜீவ ஊற்றடா.!
இடி ஒலியை
மிஞ்சுகிற.. உன்
எழுட்சிப் பாட்டடா.!
எரிமலையின் குழம்பில்
தொட்டு எழுதும் எழுத்தடா!
காணி நிலம் எங்கும் உனது.. கவிதை
முழக்கமே..
காடு.. மலை..
கடந்து இன்றும்
எதிரொலிக்குமே.!
பாடலினைக்
கேட்கும் போது..
மெய் மறக்குமே.!
ஓடுகின்ற நதியாகவே பாடல் பிறக்குமே..
ஒவ்வொருவர் நெஞ்சிலும் உன்..
நினைவிருக்குமே..!
