மா.தக்ஷிணாமூர்த்தி/காமன் கணை

கதையெழுதித்
தாடி வளர்த்துக்
கண்டதென்ன

சதை வளர்த்துப்
பிணக்குழியில் விடுவதற்கோ
இவ்வளவும்?
முலைமொட்டுகள் அரும்பிற்றோ
அவளுடலில்?

சட்டியை உடைக்கும் பூச்செடி போல
‘ப்ரா’வை மீறிப்
பாய்ந்தனவோ விரிமுலைகள்?
காமன் கணை
அவள் ஜகனத்தே தைத்ததோ?