தி.சோ.வேணுகோபாலன்/எல்லை

கால்விரல் ஊன்றி
உடல் விரைப்பாக்கி
கைவிரல் நீட்டி

ஆசை அகங்கார நகம்
வளர்த்தேன்

உள்ளங்கைச் சதை
கிழிந்து
ரத்தம் கொட்ட

நகத்தை வெட்டி
கையில் கட்டு.

கணையாழி’ ஆகஸ்ட் 1970