ஷண்முக சுப்பையா/செடி

நிழலில் நிற்கும்
செடியைப் பார்த்தாயா!
நீ
நிழலில் நிற்கும்
செடியைப் பார்த்தாயா!
அது
வெயிலை நோக்கி
தலையை நீட்டும்
பாட்டைப் பார்த்தாயா!
நீ
பாட்டைப் பார்த்தாயா!
பார்த்த பின்னும்
நிழலைத் தேடி
நீ
போவதேனய்யோ?
நீ
போவதேனய்யோ?
நிழலிலே
நிற்கும் செடி
சீராய் வளராது.
சீராய் வளர்ந்தாலும்
அது
நேராய் வளராது.
மேலும்
அதற்கு
எழிலென்பது
சிறிது மிருக்காது.
ஆகையால்
நீ
வெயிலிலே வளர்ந்து விடு.
வளர்ந்துவிட்டு
நிழலைக்
கொடுத்து விடு.