அதிரன்/பயணம்


காணவில்லை
என்ற சுவரொட்டி விளம்பரத்தில்
கண்ட முகம்
மிகப்பரிட்ச்சயமாக
இருந்தது

கடந்து சென்றவர்கள்
மீண்டும் மீண்டும் கண்டு சென்றனர்
சுவரொட்டியை
ஒரு நீண்ட சிரிப்பொலிக்கு பின்
தலையை சொரிந்த படி
அங்கிருந்து
பயணிக்க தொடங்கினான்
காணாத அவனை
காண்பதற்காக!