
வெகு நாட்களாக ராவுத்தர் வீட்டில்தான் வாசம்.
இறாலின் வாசனை தான் பிடிக்க முடியுமே தவிர ; ஒருநாளும் கிடைக்காது,ஒரு இறால் துண்டு.
இன்று மீன் வாங்கி வந்தவுடன் ஷஹிரா மீனை கழுவி திருத்தும் போது, நழுவி கீழே விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.
மீனை கவனமாய் கவ்வி எடுத்தாயிற்று. இப்போது என் கவலை எல்லாம் எவருக்கும் தெரியாமல் எப்படி அதை சாப்பிடுவது; என்பதே.எவரேனும் பார்த்து விட்டால் அடி உதை நிச்சயம். வெளியே போய் பழக்கமே இல்லையே; எப்படி வெளியேறுவது?
