
அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று வந்தார்கள்
அம்பது ரூபாய் தந்தேன்
கருப்புசாமிக்கு கட்டிடம் கட்டுகிறோம் என்று கறாராக நூறு கேட்டார்கள்
கடனே என்று கொடுத்தேன்
வருகிற புண்ணியத்தில் பாவத்தை கழுவிக் கொள்ளலாம்
என்கிற நினைப்பில் விழுந்ததெல்லாம் மண்தான்
நேற்று அந்த வழிபோகும்போது பார்த்தேன்.
கருப்புசாமி அதே கல்லாக பழைய அழுக்குவேட்டியில்
நின்றிருந்தார்
அம்மன் மட்டும் கூழ் குடித்த தெம்பில்
கொஞ்சம் பொட்டு வைத்து ஒரு கொத்து செவ்வரளி சூடியிருந்தார்.
தாராபுரம்
