வத்சலா/கொண்டாடுபவர்

பாடும் கடிகாரம்
அது
மணிக்கொருமுறை
பாடிவிட்டு
நேரத்திக்கேற்ப
மணியடிக்கும்
என் பேத்திக்கு
பாட்டு பிடிக்கும்
என்று
வாங்கியது
அவள் சிறுமியாக இருந்தபோது

ஒவ்வொரு மணிக்கும்
ஓடுவாள்
அதன் முன் நின்று
பாட்டை ரசிக்க

பத்தாண்டு இயங்கிய பின்
நிறுத்திக் கொண்டு விட்டது இன்று
பாடுவதை மட்டும்

மணி காட்டுகிறது
அடிக்கிறது

அவள் நேற்று கிளம்பினாள்
கல்லூரி மாணவ விடுதியில்
சேர

தளம் இதழ் 25 அக்-டிச 2022