ஷண்முக சுப்பையா/பசி

உனக்கும் பசிக்கும்
அது
எனக்கும் தெரியும்
எனினும்
யாரோ படைத்த
படைப்பை
ஏதோ கிடைத்தது
என்று
நீ விழுங்கிட
விழைந்தால்
விபரீதங்கள் பல
விளைந்திடலாம்
இவ்வென் கூற்றுக்கு
ஆதாரம்
எதுவேனும் வேண்டுமெனில்
விழுங்கிவிட்டு
விழிக்கின்ற எனைவந்து
பார்த்திடலாம்.