
எங்கே போகிறது
என் தேசம்
காந்தியின் கொள்கைகள்
காலாவதியாகிவிட்டன
வருடத்துக்கு ஒருமுறை
மட்டுமே அவரது பெயர்
ஊடகங்களில் அடிபடுகிறது
அப்படி ஒரு தலைவன்
இருந்தான் என்பதே
தெரியாமல் போய்விடுமோ
அடுத்த தலைமுறையினருக்கு
இன்றைய வன்முறை மிகுந்த
உலகத்தில்
அகிம்சையின் மேல்
நம்பிக்கை வைப்பது
கேலிக்குரியதாகிவிட்டது
பிரிட்டிஷார் அவரை
ஒரு போராளியாகப் பார்த்தனர்
வேற்று மதத்தினர் அவரை
ஒரு இந்துவாகப் பாரத்தனர்
வேற்று நாட்டினர் அவரை
ஒரு இந்தியனாகப் பார்த்தனர்
உயிர் பிரியும் வரை
யாரும் அவரை
ஒரு நல்ல மனிதராகப்
பார்க்கவில்லை…
