ம.சக்திவேலாயுதம்/இந்த கண்ணாடி உலகினில்

ஆக்கலை
அளித்தலை
அம்மா பார்த்துக்கொள்கிறார்..
காத்தலை
வகுத்தலை
அப்பா பார்த்துக்கொள்கிறார்..
மறைத்தலை
அருளலை
அவள் பார்த்துக் கொள்கிறாள்..
இருத்தலை
இல்லாமல்
நான் பார்த்துக்கொள்கிறேன்..
இந்த கண்ணாடி உலகினில்
பிரதிபலிக்கும்
பிரதிபலிக்காத
எல்லாவற்றையும்
நாங்கள் நால்வரும்
பார்த்துக் கொள்கிறோம்..
ஏனோ எங்களைத் தவிர!