
பொம்மை பொம்மையாக வந்து புன்னகைப்பாளே
தன்னையே விதவிதமாய்
அடுக்கி வைப்பாளே – எங்கும்
அவளிருப்பாளே
நன்மை தீமை போர்நடத்தி
வெற்றி கொள்வாளே
உண்மை என்ற சுடராக
ஒளிதருவாளே – கொஞ்சம்
ஒளிந்து கொள்வாளே
கண்ணாமூச்சி ஆடுவாள் கோலாட்டம் போடுவாள்
பட்டாம்பூச்சி போலத்தான்
சிறகடிப்பாள் சிணுங்கிடுவாள்
பாவாடைச் சட்டையுடன்
ரெட்டைஜடைப் பின்னலுடன்
பக்கத்து வீட்டுப் பெண்ணாக
வந்தழைத்திடுவாள் – சுண்டல்
தந்தனுப்பிடுவாள்
கோலாகலமாக அவள்
கொலுவிருப்பாளே – பாட்டில்
கொஞ்சிமகிழ் வாளே
—
0
