வே.கல்யாண்குமார்/கொடிகாத்தக் குமரன்!


அடி..அடி..அடி… என்று அடிக் கொடுத்த போதும்
பிடி..பிடி..பிடி.. என்று
கொடியைப் பிடித்த குமரன்!

தடி..தடி..தடி.. அங்கே
தலைவில் அடித்தப் போதும்..
தலைக் கொடுத்து விடுதலைக்கு தனைக் கொடுத்தக் குமரன்!

புடி..புடி..புடி..என்று விரட்டி வந்தபோதும்..
கொடிப் பிடித்தே.. உயிர் கொடுத்த விடுதலையின் வீரன்!

ஒடி..ஒடி..ஒடி..என்று
கையை ஒடித்தப் போதும்.. விடாமலே கொடியைப் பிடித்த திருப்பூரின் குமரன்!

துடி..துடி..துடிப் போடு
துணிந்து நின்றே தெருவில்.. தலை மீது தடி அடிகள் விழுந்தபோதும் எதிர்த்தே..

நடி..நடி..நடி என்று நடித்தவர்கள் நடுவே.. நடுங்காமல் தயங்காமல் உயிர்க் கொடுத்தான் குமரன்!

படி..படி..படி..அவனின்
பாதை தானே படிகள்..
பறக்கின்ற வெடியோசை விடுதலைக்கு முன்னெடுத்த குமரர்களின் குரல்கள்.!