செ.புனிதஜோதி/இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்

இந்த உலகம் பூங்காவனமாய்
இருந்தபோது
நம் உடலும் பூ போல் இருந்திருக்குமா ?
அம்மா என்கின்றான்
வயிற்றில் புற்று ஏற்பட்ட பையன் .

அவளுக்கு என்ன சொல்வதென்றே
தெரியவில்லை ?
கருப்பையில்
பொத்தி வளர்த்த அத்தனை ஈரத்தோடு
இறுக்கி அணைத்துக் கொள்கிறாள்.

கணமேறி அவன் உடல்
இப்போது கொஞ்சம்
பூப்போல் மாறியிருக்கும்.