
புஷ்பால ஜெயக்குமார்
அந்த மண்டபம்
அவள் வீடு செல்லும்
திசையிலிருந்தது
விசையும் உடலுடன்
அவன் அந்த மண்டபத்தை
கடந்திடும் போது
அவள் வீட்டில்
போய் வீழ்ந்தான்
காதல் வரலாறு
அறிந்த அவன்
அவளிடம் சிக்கித் தவித்தான்
மாறிய அன்பை
வாழ் நாளெல்லாம்
தழைக்க விட்டவள்
நெடுங்காலம்
வாழ்ந்து வந்தாள்
காணாமல் போன அவன்
ஒரு நாளுக்கு ஒரு நாள் கிடைத்தான்
வாழ்க்கை அரிதாகும் போது
நினைவுகளில்லையெனில்
அவர்கள் இல்லை
அது அவர்களுக்கான புரிதலில்
இருக்கும் திருப்பங்களை
அவர்கள் அனுமதித்து
வெகு நாட்களாயிற்று
இதுவரை அங்கே
என்ன நடந்தது என்று
இருவருக்கும் தெரியவில்லை
