
நாகேந்திர பாரதி
அவள் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பின்னும் அவனால் அவளை மறக்க முடியவில்லை . அவளுக்கென்றே கட்டிய அந்தப் பளிங்குக் கல்லறையின் , படி அமர்ந்து , அந்த மேடையில் முகம் சாய்த்து , அழுது கொண்டு இருப்பதில் ஒரு சுகம் அவனுக்கு . அவள் மடியில் முகம் புதைத்து மயங்கிக் கிடந்த நினைவு தரும் மாறாத மகிழ்ச்சி .
உயிர் போனாலும் கல்லறையின் உள்ளிருக்கும் அவள் உள்ளமும் சேர்ந்து அழுவது அவனுக்குத் தெரியாது .இப்படியே விட்டு விட்டால் அவன் பைத்தியம் ஆகி விடக் கூடும் . அப்படி ஆகி விட்டால் என் மடியை மறந்து விட்டு எங்காவது ஓடி விடுவானோ என்ற பயம் வந்து விட்டது அந்த உள்ளத்திற்கு .
கல்லறைக் காவலாளி இடம் அவன் அடிக்கடி சொல்வது அவள் நினைவிற்கு வந்தது. ‘ நான் இறந்தவுடன் , இந்தக் கல்லறையைத் தோண்டி இதற்குள்ளேயே என் உடலையும் சேர்த்துப் புதைத்து மேலே கல்லறையைக் கட்டி விடுங்கள். எங்கள் உள்ளங்கள் சேர்ந்தே இருக்கும் ’ ,
பெண் உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது . வெளி வந்து கல்லறை மடியில் கண்ணீர் விட்டபடி சாய்ந்து கிடக்கும் அவனைக் கட்டி அணைத்தது .
அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு . அவளா , வந்து விட்டாளா . அதே அன்பின் அரவணைப்பு . அதே காதலின் கதகதப்பு.
அவள் அணைப்பு இறுகுகிறது . அவன் உள்ளம் உருகுகிறது . உருகி உருகி இரண்டு உள்ளங்களும் ஒன்றாய் சேர்கின்றன .

சிறப்பு. கதை அழகான விதத்தில் நீட்டி முழக்காமல் தெளிவுற செல்கிறது. சொல்கிறது.
Thank you RK
பாவத்தின் சம்பளம் மரணம் என்று சிலர் கூறுவதுண்டு. அது பிழை. உண்மையில் காதலின் சம்பளம் தான் மரணம் என்பதை நாகேந்திரர் இக்கதையில் எடுத்துக் காட்டுகிறார்.
Thanks a lot Chellappa Sir