ஸ்ரீதர்-சாமா/நொண்டி நாய்க்குட்டிக்கு பரிவு காட்டிய பகவான்

தனக்கிட்ட இட்லியை அது ஆஷ்ரம் வாயிலில் தான் அமர்ந்து சாப்பிட்டு மலமும் அங்கேயே கழிக்கும். கோபம் கொண்ட ஆஸ்ரம சர்வாதிகாரி கிருஷ்ணஸ்வாமி அதற்கு இட்லி தருவதைச் சில நாட்கள் தடை செய்தார் . பசித்த நாய்க்குட்டி பகவானை அண்டியது. பகவான் விஷயமறிந்து “ஆமாம் . இப்ப உன் டர்ன் . அதிகாரம் காட்டறதுக்கு . அதிகாரம் காட்டத்தானே நீங்கள் எல்லாம் இருக்கீங்க.” என்று சொல்லிவிட்டுத் தன் கோபத்தைக் காட்ட இட்லி சாப்பிட மறுத்தார் .

அனைவரும் வந்து அவரிடம் நமஸ்காரம் செய்தனர். சின்னஸ்வாமியும் வந்தார் . “நீ என்ன செய்வே? அவன் தன் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் பண்ணிட்டான் ” என்றார் பகவான் .

நொண்டி வெளியே திரிந்துவிட்டு பகவானிடம் வரும் . எங்கோ தின்ற மலம் வாயில் வழியும் . பகவான் பேசாமல் தன் வெள்ளைத் துண்டால் துடைப்பார் . அவர் அடியார்கள் அவர் துண்டைக் கீழே வைத்தால் தோய்க்கத் தயாராய் நிற்பார்கள். ஆனால் துண்டைக் கீழே போடாமல் தன் கஷ்கத்தில் செருகிக் கொள்வார் . மறுநாள் அவரே அதைத் தோய்ப்பார் . தன் அளவற்ற கருணை மற்றவர்களுக்குத் துளியும் சிரமம், அருவருப்பு தரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார் . பகவான் ஒரு ஞானியின் பரிபூரண அவதாரம் . “நீங்க எல்லாம் வெளியே காட்டற தூய்மை உள்ளே இருக்கான்னு கொஞ்சம் பாருங்கோ” என்பார் .

One Comment on “ஸ்ரீதர்-சாமா/நொண்டி நாய்க்குட்டிக்கு பரிவு காட்டிய பகவான்”

Comments are closed.