ரவி அல்லது /புறப் பாசாங்குகள்

வெகு சீக்கிரமாக
விடிந்து விடுகிறது
எப்பொழுதும்.
வெகு சீக்கிரமாக
விடியவே மறுக்கிறது
எப்பொழுதாவது.
போர்த்திக்கொண்ட
போர்வையின்
பொருட்டாகவே
அமைகிறது
தூக்கமும்
விழிப்பும்
எப்பொழுதும்
நேரத்தை
நொந்த படி.
மற்றபடி
கொசுவைப்போன்ற
கொசுறுக் காரணங்களுக்கும்
இருக்கத்தான்
செய்கிறது
தன்னை நோக்கி
ஒரு பொழுதும்
திரும்பிடாதபடி
பாசாங்கில்
பார்த்துக் கொள்வதற்கு.