ஜனனியின் கருப்பையில்
மார்பின் கதகதப்பில்
கயிறு நுனி தூளியில்
கிரீச்சிடும் தொட்டிலில்
தந்தையின் அரவணைப்பில்
கோரைப் புல் பாயில்
சூரலிழைக் கட்டிலில்
எதிர்பாலின் கிளுகிளுப்பில்
வெல்வெட் மெத்தையில்
சேய்களின் ஸ்பரிசத்தில்
கோரைப்புல் பாயில்
கட்டாந் தரையில்
நா லு
பே ர்
தோள் தாங்கும்
பச்சை மூங்கில் பாடையில்
இடுகாட்டு வரட்டியில்
உய்விக்கும் நெருப்பில்
ஆறடி மண்ணில்
அந்தரீஷ வெளியில்
1966

🙏🙏👏🙇♀️
எதார்த்தமான பார்வைகளில் உருவான கவிதை பாராட்டுக்குரியது.