
ஒரு குதிரை வீரன்
ஒரு சமயம் ஒரு துருக்கி குதிரை வீரனும் அவன் மனைவியும் ஒரு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு வாய்க்காலைக் கண்டதும் மனைவி இளைப்பாறுவதற்காக இறங்கினாள். வீரன் தன் குதிரைக்குத் தண்ணீர் காட்ட ஆரம்பித்தான்.
அப்பொழுது அவ்வழியாக ஒரு குடியானவன் வந்தான். அவனைப் பார்த்து துருக்கிய ஸ்திரீ, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டாள். அதற்கு அவன் “அந்த உலகத்திலிருந்து” என்று பதிலளித்தான். “அப்படியா! அப்படியானால் இறந்து போன என் மகன் மேலோவை அங்கு பார்த்தாயா!’ என்று அவள் கேட்டாள்.
”ஆஹா, அவனை எனக்கு வெகு நன்றாகத் தெரியுமே” என்றான் குடியானவன்.
“அப்படியானால் அவன் எப்படியிருக்கிறான்?”
“சௌக்கியமாகத்தான் இருக்கிறான். ஆனால் தினம் காலையில் காப்பியும், பலகாரமும்தான் வாங்கிச் சாப்பிட கையில் பணமில்லாமல் தவிக்கிறான்…”
“அப்படியா! அப்படியானால் இந்த பணப் பையைக் கொண்டு போய் நான் கொடுத்ததாகச் சொல்லி என் பிள்ளையிடம் கொடு` என்று தன் பணப்பையைக் கொடுத்தாள். இவளுடைய கணவன் தூரத்தில் குதிரைக்குத் தண்ணீர் காட்டிக் கொண் டிருந்ததால் இவர்களைக் கவனிக்கவில்லை. ஆகவே பணப்பையை வாங்கிக் கொண்டு குடியானவன் ஓட்டம் பிடித்தான்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இத்தகவலை அறிந்த குதிரை வீரன், குடியானவன் தன் மனைவியை ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்து, அவனைப் பிடிப்பதற்காகக் குதிரை மீது வேகமாகச் சென்றான்.
இதைக் கண்ட குடியானவன் அங்கிருந்த ஒரு மாவு மில்லுக்குள் நுழைந்து அங்கிருந்த மில்காரனைப் பார்த்து, “ஒரு துருக்கி வீரன் உன்னைக் கொல்வதற்காக வருகிறான். உடனே ஓடிப்போ” என்றாள். இதைக் கேட்டது தான் தாமதம் அந்த மில்காரன் பக்கத்தில் இருந்த ஒரு மலை மீது ஏறி ஓட ஆரம்பித்தான்.
இதற்குள் குடியானவன் மில்காரனைப் போல் வேஷம் போட்டுக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தான். இவனைப் பார்த்து குதிரைவீரன், “இங்கு ஒருவன் ஓடி வந்தானே, நீ பார்த்தாயா?” என்று கேட்டான்.
”அதோ மலை மீது ஏறி ஓடுகிறான் பார்!” என்றான் குடியானவன்.
“அப்படியானால் இந்தக் குதிரையைப் பார்த்துக் கொள். நான் போய் அவனைப் பிடித்துக் கொண்டு வருகிறேன்'” என்று மலை மீது ஏறினான் குதிரைவீரன்.
மலை மீது ஏறி, மில்காரனைப் பிடித்து அவனைக் கொல்லப் போகும் சமயம்தான் தான் ஏமாற்றப்பட்டதை குதிரை வீரன் உணர்ந்தான். இருவரும் கீழே இறங்கிய போது குடியானவனையும் காணவில்லை. துருக்கி வீரனின் குதிரையையும் காண
வில்லை.
மனம் உடைந்து அவன் மனைவி இருக்கும் இடம் திரும்பியதும் அவள் அவனைப் பார்த்து, ‘குதிரை எங்கே?” என்று கேட்டாள்,
அதற்குக் கணவன், “அந்த உலகில் இருக்கும் நம் மகன் குதிரையில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறானாம் ஆகவே அவலனுக்குக் குதிலரயையும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுக்கும்படி குடியானவனிடம் கொடுத்தேன்” என்றாள் .
