அழகியசிங்கர்/கண் சிமிட்டல்

நான்
ரொம்பப் பெரியவன்
ஆனபிறகு
காதலைப் பற்றி
கவிதை எழுதுவதை
நிறுத்திக் கொண்டேன்

என்னிடம்
அன்பாக இருக்க
என் சுற்றமிருக்கிறது

நலம் விசாரிக்க
நட்பு வட்டமிருக்கிறது

யாரும் இல்லாவிட்டால் கூட
தெரு முனையில்
இருக்கும்
அனுமார் கருணை மிகுந்த
முக பாவனையுடன்
என்னை ஆசீர்வாதம் செய்வார்
ஒவ்வொருநாளும்
கண் சிமிட்டலுடன்
பார்த்தபடியே
நடைப் பயிற்சிக்குப்
போவேன்