
ஞாயிறு மதியம் மூர்த்தியின் நண்பன் வாசு
விடமிருந்துபோன்வந்து அவனுடன் பேசியபிறகே மூர்த்தி சுறுசுறுப்புடன் வேலை
செய்யத்துவங்கினான்.
ஹால் சுவரிலிருந்த தன்மகன்கள் நிகில்
நீலேஷ் இருவரின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டு ,
அங்கேபிள்ளையார் மற்றும் முருகனின்படங்களை
பூஜை அறையிலிருந்து கொண்டுவந்து மாட்டினான்.
தன் மகன்களின்அறையை தாளிட்டுவைத்தான்.
“என்ன பண்ணறீங்க நீங்க?”
அவன் மனைவி மீனா அதிர்ந்து போனவளாக
கேட்டாள்.
“என் க்ளோஸ் பிரண்ட் வாசு தன் மனைவி
லீலாவுடன் நம்ம வீட்டுக்கு இன்னும் கொஞ்ச
நேரத்தில் வரப்போவதாக சொன்னான்”
“யாரு?கலியாணமாகி பத்து வருஷமாகியும்
இன்னும்குழந்தைபாக்கியம்இல்லேன்னு
நீங்க கூட ரெண்டுமூணு கோயில்லே அவங்க
ளுக்கு அனுக்கிரகம் பண்ணுமாறு வேண்டிக்
கிட்டு பூஜை பண்ணீங்களே”
“ஆமாம். காலேஜிலேருந்தே எனக்கு ரொம்ப
க்ளோஸ் பிரெண்ட்.”
அது சரி இப்ப நம்ம பசங்க போட்டோவை ரிமூவ் பண்ணி
அவங்க ரூமை மூடி இதைஎல்லாம் ஏன் பண்ணறீங்க?”
“அவங்க வந்து பார்த்து தங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையேன்னு வருத்தப்படக்
கூடாது. அவங்க வருகிறபோது நம்ம பசங்க
ஸ்கூல்லே ஆண்டுவிழான்னுபோயிருக்கிற
தும்நல்லதுதான். அவங்ககிட்டே நம்மபசங்க
பத்தி நீயாக எதுவும் சொல்லாதே.
அவங்களாக ஏதாவது கேட்டால் பதில் சொன்
னால்போதும்.”
“சரி” மீனா சம்மதித்தாள்.
வாசுவின் மனைவிலீலாவும் வந்து அரைமணிநேரம்
இருந்துவிட்டுகாபி அருந்தி தாங்கள் சிங்கப்பூர் போய்வந்த சுவாரஸ்ய அனுபவங்
களைப்பகிர்ந்து கொண்டார்கள்.
“வாசு நீவந்தது ரொம்ப நன்னா இருந்தது”
மூர்த்தி மனப்பூர்வமாகச்சொன்னான்.
ஆட்டோபிடித்துக்கிளம்பியதும்”என்னங்க
மூர்த்தியேம் அவர்மனைவியும் இப்படி நடந்துப்பாங்கன்னு நான் நினைக்கல்லே.”
வாசுவின்மனைவி வனஜா சொன்னதும்
“என்ன சொல்லரே நீ”
அவன் கேட்டான்.
“நாம வரோம்னு பசங்கபோட்டோவைக்கூட
எடுத்து ஒளிச்சுவெச்சுட்டாங்க. அவங்களைப்பத்தி ஒருவார்த்தைகூடபேசாம
அவங்களை எங்கேயோஅனுப்பிவெச்சுட்டு
எப்படிசமாளிச்சாங்க பார்த்தீங்களா? நம்ம
கண் பட்டுவிடுமோன்னு பயம் போல இருக்கு.
நானும் அதைப்புரிஞ்சுண்டு எதுவுமே கேக்கா
மல் வந்துட்டேன்.இனிமேல் இவங்க வீட்டுக்கு நாம் வரக்கூடாது”
திடீரென்று ஆட்டோவை நிறுத்திய டிரைவர்
“உங்களை இப்ப உங்களை வழியனுப்பினாரே மூர்த்திசார் அவர்வீட்டுக்கா போயிருந்தீங்க? “என் றுகேட்டான்.
“ஆமாம்”
“நீங்கதான் வாசுவா?”
“ஆமாம், உனக்கு இதெல்லாம் எப்படித்தெரி
யும்?”
“இதுமாதிரி அன்பான சினேகிதன்கிடைக்க
நீங்கரொம்ப குடுத்து வெச்சிருக்கீங்க. உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணு
ம்னு வேண்டிக்கிட்டுபூஜைபண்ண அவரும் மீனா மேடமும் பல முறை என் ஆட்டோவில்
கோயிலுக்குப்போயிருக்காங்க.அப்படித்தான்
தெரியும்” சொல்லிவிட்டு ஓட்டுனர் ஆட்டோவைக்கிளப்பியதும் வாசுவும் வனஜாவும் திகைப்பில் உறைந்துபோனார்கள்.
