
ஆர்க்கே
மரக்கிளையில் ஒரு பறவை.
காற்றில் தத்தளிக்கிறது
கிளை.
பறவையின் பாரமும்
கூடுதல் சுமை.
ரெட்டை ரெட்டை இலைப்பரப்பில்
ஓர் இலைநடுவே நெளிகிறது
ஒரு புழு.
இரைக் கவனப்பறவை
பார்வை குவிக்க
தரையில் பறவைக்கு
இலக்கு வைத்து
கவண் நடுவில்
ரப்பரும் தோலும்
முன் பாய்ச்சல் தீவிரத்திற்காய்
பின் இழுக்கப்பட
கவண் மத்தியில்
விரல் பிடிப்பில்
சிறு கல்லொன்று
பறவைக்காய் சீற
பறவை புழுவுக்காய்
படபடக்க
புழு இலை கொறிக்க
அடித்த சிறு காற்றுக்கு
இலை உதிர்கிறது
புழு பறக்க
பறவை நகர
கவண் கல்
குறி தவறி
வீழ்கிறது–
தரைச் சருகாய்.

நுட்பமான பார்வை. வாழ்க்கை அப்படித்தானே
நுட்பமான பார்வை. வாழ்க்கை அப்படித்தானே