***
பூ.சுப்ரமணியன்

மழைக்காலத்தில் மனிதர்கள்
வீட்டில் முடங்கிக் கிடக்கும் போது
நத்தையாரே நீ மட்டும்
நகர்ந்து வருகிறாயே
அதுவும் உன் வீட்டை சுமந்து கொண்டு .
சாலையில் நீ கடக்கும் போது
வாகனங்கள் ஒலி கேட்டு
விரைவாக
ஓடவும் முடியாமல்
ஒதுங்கவும் முடியாமல்
நகர்ந்து செல்கிறாய்
வாகன ஓட்டுநர்கள்
உன்னைக் கண்டும் ஒதுங்கி செல்லாமல்
உன் கூட்டோடு இரக்கமின்றி
நசுக்கி செல்கிறார்களே
மழையின் அழகினை ரசிக்க வந்த நீ
மடிந்து விடுகிறாயே
மனிதர்கள் போல்
நீயும் கூட்டோடு
முடங்கிக் கிடக்க வேண்டியதானே!
