சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்

காலையில் ஒரு கோப்பை
நல்ல தேனீர்
இரவுவரை கதகதப்பான
குளிர் காக்கும் போர்வையுடன்
நல்ல சங்கீதம்
மின்சாரம் இருக்கும் பட்சத்தில்
இல்லாத போது
மனைவி குழந்தைகளோடு
சிரிப்புடன் அரட்டை.
மறுபடி தேநீர்
மெதுவாக பெய்யும் மழையை
வேடிக்கை பார்த்தால்
நலமாக நேரம் போய்விடும்

One Comment on “சுரேஷ் ராஜகோபால்/மழை காலம்”

Comments are closed.