வே.கல்யாண்குமார்/எலியார்.!

எலியாரே.. எலியாரே..
சௌக்கியமா.?
எளியோரைப் போலிருப்பீர்..
சௌக்கியமா.?

வீட்டுக்குள்ளே பானையினை
உருட்டுவீரே..
ஓடியாடி பரணிமேலே
விளையாடுவீரே.!

சந்துக்குள்ளே பொந்துக்குள்ளே உருளுவீரே.!
சாந்துநிறம் மின்னும் மேனி நிறத்தவரே.!

ஊரையடிச்சு உலையில் போடும் பெருச்சாலிகள்
உலவுகின்ற நாட்டில் பிறந்த சுண்டலியாரே!

சுறண்டி பிழைத்து..
நக்கித் தின்னும் கருப்புயெலிகள்
சுதந்திரமாய் உலவுகின்ற நாட்டினிலே..

சுண்டலியாய் எங்கள் வீட்டின் கொள்ளைப்புறம் பிறந்தவரே.!
முன்டியடித்து முற்றத்தில் துள்ளி விளையாடுவீரே.!

பிள்ளையாரு காலடியில் அமர்ந்தவரே!
எலிப் பிள்ளை யாரு.. என்றுபாட வைத்தவரே!

நலலவர் யார்? கெட்டவர் யார்.? தெரியலையே.!
உள்ளவர் யார்? வறியவர் யார்? அறியலையே.!

சுண்டெலிகள் குண்டெலிகள் வயலெலிகள்..
வீட்டுஎலிகள்..
அத்தனையும் சுறண்டுவது பிறவிக்குணம்!
காண்பதெல்லாம் சுறண்டுவதோ மனிதகுணம்.!

வலியோர்கள் மெலியாரை வதக்குவது மனிதகுணம்.!
ஏணிவைத்தும் எட்டாது எலயாரே உங்கள் இனிய குணம்!