
எழுது எழுது என்றாய்
எழுதினேன்.
உன் மீசையின் கம்பிரத்தைப்
போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்
மீசையின் வரலாறு தெரியுமா?
அதன் வகைகள் அறிவாயா?
மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன்
எழுதிய
சர்ரியலிசக் கள்தை படித்திருக்கிறாயா?
கேள்விகளை அடுக்குகிறாய்.
நண்பனே!
உன் கற்பனை மீசையைத் திருகி
நீ கொள்ளும் பரவசம்
எவ்விதம் நானறிவேன்
எங்ஙனம் அதுகுறித்து எழுதுவேன்.
கொல்லிப்பாவை: ஜூன் 1988
