
ஓடி ஓடி பட்டாசுக்களை
வெடித்து மகிழும் சிறுவர்களை
ரசித்தபடி நின்ற நண்பர்களில் ஒருவர் சொன்னார்
நாமளும் இத போல்தான
சந்தோஷம் வர வரைக்கும் காத்திருக்கோம் கிடைத்ததும்
அடுத்தத தேடி ஓடறோம் என்று.
அடுத்தவரோ
நம்ம வாழ்க்கையே
பட்டாசு போலத்தானே
எங்கேயோ தயாராகி
எப்படியெல்லாமோ மாறி
கடைசியில் கரியா போவுது
என்றார்
மூன்றாவது நண்பர்
அமைதியாய் இருந்தார்.
அவரிடம்
எங்க உங்க நெனப்பு
என்று ஒருவர் கேட்க
பட்ஜெட்ட விட அதிகமா
பட்டாசுக்கு செலவாயிடுச்சு
எதுல சரி கட்டறதுன்னு
யோசனை என்றார் இவர்.
