அனங்கன்/எத்தனை இல்லை

கதவைத் திறந்துவைத்தேன்
காற்றுவரவில்லை….
நேற்றுவந்த பறவை
இன்று காணவில்லை.

அன்பைத்தேக்கி வைத்தேன்
யாரும் கொள்ளவில்லை….எதிரில்
வாலாட்டிய அன்பை நான்
உணரவில்லை.

புனிதமென்று சொல்ல
எப்பரப்பு எல்லை….?
புனிதர்கள் பகர்ந்த சொல்லை
ஒழுகிடுவார் இல்லை.

தேடிவைத்த செல்வம் அமைதி
தருவதில்லை….
அமைதி என்றசெல்வம்
வெளியில் கிடைப்பதில்லை.

நிலைக்குமென்று எதுவும்
நின்றுகொடுப்பதில்லை…
நின்றுகொடுக்கும் தெய்வம்
எந்தன் திசையில் இல்லை.

One Comment on “அனங்கன்/எத்தனை இல்லை”

Comments are closed.